Sunday, February 7, 2010

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Saturday, February 6, 2010

அசல் விமர்சனம்



அசல் 
அஜித் நடித்து சுமார் ஒரு வருடம் இருபத்தைந்து  நாட்கள் கழித்து மிகவும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம்......
அஜித் தோற்றமே படத்தை  பார்க்க வேண்டும் என்று தூண்டும்.ஆனால் படம்.......
அஜித்துக்கு இதில் அப்பா மகன் என இரட்டை வேடம் ....
அப்பா அஜித்திற்கு மூன்று மகன்கள் சாம்(சம்பத் ),விக்கி(ராஜீவ் ) & சிவா  (அஜித் ). சிவா அப்பா அஜித்தின் கீபுக்கு பிறந்தவர் அதனால் விக்கி ,சாம் இருவரும் சிவாவை வெறுக்கிறார்கள் .அப்பாவோ சிவாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இருவரும் கொண்டுவரும் வேலைகளை சிவாவை கேட்டுவிட்டு வேண்டாம் என்கிறார் அப்பாஇதனால் மிகவும் கோபப்படும் இருவரும் மாமாவின் (பிரதிப் ரவாத் -கஜினி வில்லன்யோசனையுடன் அந்தவேலையை இருவரும் சேர்ந்து செய்ய அப்பாவிடம் பணம் கேட்கிறார்கள்அப்பா தரமறுக்க மூவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார்இதற்கிடையில் அப்பா அஜித் இறக்க மகன் அஜித்தை வெறுப்பேற்றி அனைத்து சொத்துக்களையும் இருவரும் வாங்கிவிடுகிறார்கள்அந்த contract யை இருவரும் தொடங்க இந்த தொழிலில் கொடிகட்டி பறக்கும் செட்டி(கெல்லி டோர்ஜி ) விக்கியை கடத்துகிறார்இது தெரிந்த சிவா விக்கியை காப்பாற்றுகிறேன் அதன் பின் மூவரும் ஒன்றாக இருப்போம் என்று சொல்கிறார்பிறகு விக்கி யை காப்பாற்ற சாரா (சமிர ரெட்டி ) யை அழைத்து கொண்டு மும்பைக்கு மிரசியிடம்(பிரபு சிவாவை வளர்த்தவர் ) செல்கிறார்அங்கே சுலபா (பாவனா ),டான் சம்சா(யூகி சேது ) இருக்கிறார்கள்விக்கி யை காப்பாற்ற செட்டியின் ஆட்களை கொள்கிறார் சிவாஇதற்கிடையில் சாரா செட்டியிடம் சிக்கிவிடுகிறார்சாம்விக்கியை காப்பாற்ற அனைத்து சொத்துகளையும் செட்டிக்கு எழுதி கொடுக்கிறார்செட்டி வாங்கிகொண்டு மூவரையும் கொள்ள நினைக்க இப்பொழுது சிவா வந்து காப்பற்றிவிடுகிறார்ஆனால் சாம் விக்கி இருவரும் சிவாவை துப்பாக்கியில் சுட கடலில்  விழுகிறார் . சிவா பிழைத்தார  மூவரும் இணைந்தார்களா என்பது மீதி கதை....
அப்பாவின் தோற்றத்தில் அஜித் வெளுத்து வாங்குகிறார்அப்பா அறிமுகமானவுடனேயே கதை எங்கோ செல்ல போகிறது என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகிறார்கள் ஆர்வம்  குறைவதற்குள் அப்பா செத்து விடுகிறார்...
ஆரம்பத்தில் வரும் சண்டைகாட்சிகள் மிக அருமை .
ஆனால் படம் அதே வேகத்துடன் செல்லவில்லைசமிரரெட்டி படத்தில் ஆங்கில படங்களில் வரும் நயகியைபோல் வைக்கிறார் . பாவனா அச்சு அசல் வழக்கமான தமிழ் நாயகியாக வருகிறார்.
யுகிசெது மற்றும் அவருடன் வரும் எடுபிடிகள் சிரிக்க வைக்கிறார்கள் . சிரிப்பு தொடரவில்லை .......
பிரபு அனைத்து படங்களிலும் வரும் அதே கேரக்டர் இதில் பெயர் மிராசி .
துப்பாக்கியை முதலில் எடுத்து சுடும் காட்சி -ஜாக்கிசான் படத்தில்  பார்த்தது புதுசா எதாவது யோசிங்கப்பா.
படத்தில் அஜித்தை தவிர அனைவரும் அதிகமாக வசனம் பேசுகிறார்கள்அனைவரின் வசனங்களிலும் தல தல என்று சொல்வது அஜித்  ரசியர்க்லையே வெறுப்படைய செய்கிறது.
அஜித்திற்கு வசனங்கள் நான்கு பக்கங்கள் தான் என்று சொல்கிறார்கள் நாம் எழுதினா அன்தும் ஒரு பக்கத்திற்குள் வந்துவிடும் அவ்வளவு கம்ம்மியாக பேசுகிறார் 
வசனங்கள்  நன்றாக  தான் இருக்கிறது ஆனால் புரியவில்லை.(கொஞ்சம் சத்தமாக  பெசிருக்கலம் )
 இடைவேளைக்கு பின் சமிரரெட்டி யை சந்திப்பது அப்பாவின் சாவு போன்றவற்றில் twist (திருப்பங்கள் ) வைத்திருக்கிறார்கள்டைரக்டர் நினைத்திருப்பார் போல ஆனால் நாம் முன்பே யூகித்துவிடலாம்
திரைக்கதை வேகமாகவும் இல்லை மிதமாகவும் இல்லை ஆமை போல் ஆரம்பம் முதல் கடைசிவரை செல்கிறது . 
கதை சொல்லவேவேண்டாம் நீங்கள் இதுவரை திரையில் பார்த்திராத புத்தம்புதிய கதையல்ல உலக மகா பழசு .....
யுகிசெது கதவை திறக்கும் காட்சியில் அரங்கமே சிரிக்கிறது நல்ல நகைச்சுவை .
படத்தில் பாடல்கள் இருநாயகிகளுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்திருக்கிறார்கள் நல்லதொரு பிரிப்பு டைரக்டர்க்கு  பாராட்டுகள்..
பாடல்களுக்கு அஜித் பொருந்தவே இல்லை .....
ஆனால் படம் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறது அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக இருக்கிறர்கள் .சண்டைகாட்சிகளில் அஜித் பறக்காமல் பாயாமல் அழகாக நின்று விளையாடுகிறார்.
அழகான காட்சியமைப்புகள் காமிரா மேனுக்கு  பாராட்டுகள் .....ஆனால் பில்லா சாயல் 
அஜித் படம் முழுக்க நடந்து கொண்டிருக்கிறார்.. கொஞ்சம் நடிங்க சார் ...
இந்த கதை  திரைக்கதைக்கு மூன்று பேர் ஏன் என்று தெரியவில்லை பழைய படங்களின் டிவிடி போதும் ..
மொத்தத்தில் அஜித்திடம் நிறைய எதிர்பார்கிறோம் ....
நடந்தது பொதும் நடிக்க துவங்குங்கள் தல .......
அசல் கலர் ஜெராக்ஸ் .........





Thursday, January 21, 2010

குட்டி நச் விமர்சனம்

கு‌ட்டி  

தெலுங்கில் வெற்றிபெற்ற ஆ‌ரியா படத்தின் ‌‌ரீமேக். தனுஷ், ஸ்ரேயா நடிக்க மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியிருக்கிறார்.


WD
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் தொடர்ந்து வரும் முக்கோண காதல் கதைதான் குட்டியின் கதையும். தனுஷுக்கு ஸ்ரேயா மீது காதல், ஸ்ரேயாவுக்கோ சமீர் தத்வானி மீது லவ். சண்டைக்குப் போகாமல் சாத்வீகமான முறையில் ஸ்ரேயாவின் காதலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் தனுஷின் கதாபாத்திரம் மட்டும் கொஞ்சமோ கொஞ்சம் புதுசு.

சமீர் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான பணக்கார இளைஞன். ஸ்ரேயாவின் காதலை‌ப் பெற மாடியில் இருந்து குதிப்பேன் என்று மிரட்டுகிறார். பாவம்டி அவன் என்று தோழிகள் சாம்பிராணி போட, ஸ்ரேயாவும் ஐ லவ் யூ சொல்கிறார். தமிழ் சினிமா த‌‌ரித்திரத்தில்... ஸா‌ி, ச‌ரித்திரத்தில் ஆயிரத்தோரு முறை அரங்கேறிய இந்த‌க் காட்சியை மீண்டும் எப்படி வைக்கத் துணிந்தார்களோ?

இந்த ஐ லவ் யூவை கேட்டுக் கொண்டே எ‌ண்ட்‌ரியாகிறார் தனுஷ். ஸ்ரேயாவை பார்த்த உடனே அவருக்குள் காதல். நான் உன்னை காதலிக்கிறேன், நீ அவனை காதலிக்கிற என்று சொல்லியபடியே ஸ்ரேயா பின்னால் சுற்றுகிறார். இடையிடையே, ஸ்ரேயா எனக்குதான் என்று சமீருக்கு இனிமாவும் கொடுக்கிறார்.

ஸ்ரேயா, சமீர் காதலுக்கு திடீர் வில்லனாகும் ராதாரவிக்குப் (சமீ‌ரின் தந்தை) பயந்து ஊரைவிட்டு ஓடுகிறது காதல் ஜோடி. அவர்களுக்கு உதவி செய்கிறார் தனுஷ். சமீர் அப்பாவை சமாதானம் செய்து அழைத்து வரும் ஒருவார கேப்பில் ஸ்ரேயா மனதில் பெவிகாலாய் ஒட்டிக் கொள்கிறார் தனுஷ். மணவறையில் ஸ்ரேயா யாருக்கு மாலை போடுகிறார் என்பதுடன் சுபம்.

சுவாரஸியமே இல்லாத திரைக்கதையை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்துகிறார் தனுஷ். அதற்காக ஓட்டைப் பானையில் ஒண்ணுக்கிருந்த மாதி‌ி லொட லொட என்று பேசுவது சில நேரம் எ‌ரிச்சலை கிளப்புகிறது. தனுஷ் யார், ஸ்ரேயாவுக்கு சொந்தம் என்று யாராவது உண்டா என்பது போன்ற அடிப்படை கேள்விகளுக்கு படத்தில் பதிலில்லை. ஆளில்லாத ஏ‌ரிக்கரை பூசா‌ரி தனுஷை பற்றி சொல்வது நம்பும்படி இல்லை.

ஸ்ரேயா எல்லா காட்சிகளிலும் சுமாராகவே இருக்கிறார். நடிப்பும் அப்படியே. வழக்கமாக அமெ‌ரிக்காவிலிலுந்து ‌ரிட்ட‌ன் ஆகும் பா‌ரின் மாப்பிள்ளை ரோல்தான் சமீருக்கு. என்ன இதில் படம் நெடுக வருகிறார்.

இரண்டு பாடல்கள் கேட்கலாம் ரகம். இந்த‌க் கதைக்கு எப்படி ஒளிப்பதிவு செய்தாலும் அதிகம்தான். குட்டி என்றால் பதினாறு அடி பாயுமாம். இந்த குட்டி தவழ்ந்திருப்பது நாலே அடி.

Wednesday, January 6, 2010

ரஜினியோட சமையல்

அஜித்தோட சோகப்பாட்டு

Friday, December 25, 2009

வேட்டைக்காரன் குசும்பு விமர்சனம்

வேட்டைக்காரன்

குருவி, வில்லு வ‌ரிசையில் விஜய் நடித்திருக்கும் இன்னொரு வித்தியாசமான படம், வேட்டைக்காரன். குருவியை இயக்கிய தரணியிடம் அசோஸியேட்டாக இருந்த பாபு சிவன் வேட்டைக்காரனின் இயக்குனர். நாக்கமுக்க புகழ் விஜய் ஆண்டனி இசை.
திருப்பாச்சியில் சிற்றூ‌ரிலிருந்து சென்னைக்கு வந்து ரவுடிகளை அழிக்கும் விஜ‌ய், வேட்டைக்காரனில் வித்தியாசமாக பெருநகரம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்து ரவுடிகளை அழிக்கிறார். அவரது தூத்துக்குடி டூ சென்னை பயண நோக்கமும் படு வித்தியாசம்.

ரயில்வே ஸ்டேஷன் போன்ற சந்தடி மிகுந்த இடங்களில் தனியாளாக ரவுடிகளை என்கவுண்ட‌ரில் போட்டுத் தள்ளும் போலீஸ் அதிகா‌ரி தேவரா‌ஜ் (தெலுங்கு நடிகர் ஸ்ரீஹ‌ரி). இவரது ஆதர்ஷ ஃபேன் தூத்துக்குடியில் வசிக்கும் ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்). சென்னை வரும் போலீஸ் ரவி தேவரா‌ஜ் போலவே ஆட்டோ ஓட்டி, அவர் படித்த கல்லூரியிலேயே படிக்கிறார். தேவரா‌ஜ் போலவே என் கவுண்டர் போலீஸாக வேண்டும் என்பது ரவியின் கனவு, லட்சியம்.

இந்த‌க் கனவு, லட்சியத்துக்கு நடுவில் ரவுடி கும்பல் ஒன்று கிராஸாகிறது. (எப்படி கிராஸாகிறார்கள் என்பதை பிறகு பார்ப்போம்). ரவுடிகளை அழித்து சென்னையை ரவி எப்படி சுத்திக‌ரிக்கிறார் என்பது வேட்டைக்காரனின் மைய கதை.




விஜய்யின் அறிமுக காட்சிக்கே இயக்குனர் அதிகம் யோசித்திருக்கிறார். முதியவர் ஒருவரை இடித்துவிட்டு செல்லும் போலீஸ் வண்டியை விஜய் துரத்துகிறார். முடியவில்லை. திரும்பிப் பார்த்தால் குதிரைக்கு லாடம் அடிக்கும் இடம். அங்கே சில குதிரைகள். அடுத்தகணம் வெள்ளை குதிரையில் தலையில் கௌபாய் தொப்பியுடன் ஸ்லோமோஷனில் வண்டியை துரத்துகிறார் விஜய். கௌபாய் தொப்பியை குதிரைக்கார‌ரிடமிருந்து விஜய் வாங்கியிருக்கலாம். இயக்குனர் காட்டவில்லை. இப்படி பார்வையாளர்களே யூகித்து பு‌ரிந்து கொள்ள பல்வேறு காட்சிகளை புத்திசாலித்தனமாக வைத்திருக்கிறார்கள்.



போலீஸ்கார‌ரிடமிருந்து பணத்தை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் கொடுப்பதும், அவர்கள் உங்களைப் போல் யாருண்டு என்று வாழ்த்துவதும் மரபு மாறாமல் வரும் அடுத்த காட்சிகள். அறிமுக காட்சிக்குப் பின் அட்வைஸ் பண்ணுகிற பாடல் என்ற மரபையும் கறாராக பின்பற்றியிருக்கிறார்கள்.



கதாநாயகியின் அறிமுகத்தையும் சிறப்பாக குறிப்பிட வேண்டும். திருமணம் பற்றி பேச்சு வருகிறது. எனக்கான பெண் இனிமேலா பிறக்கப் போகிறாள்? அவ எப்போதோ பிறந்திருப்பாள் என்கிறார் விஜய். உடனே தலையை கோதியபடி அனுஷ்கா எ‌ண்ட்‌ரி. தியேட்ட‌ரில் விசில். வித்தியாசமான அற்புத காட்சி.



விஜய் அனுஷ்காவின் பாட்டியை கரெக்ட் செய்வதும், அவரது ஸ்கூட்டியை கண்டுபிடிப்பதுமான காமெடி காட்சிகளுக்கு குழந்தைகளும் பெ‌ரியவர்களும் சேர்ந்து சி‌ரிப்பதை குறிப்பிட்டாக வேண்டும். காமெடி சீன் என்றதும் தோளை குறுக்கி தலையை ஆட்டி என்னங்கண்ணா என்று விஜய் பேச்சையும், பாடி லாங்வேஜையும் மாற்றுவது சூப்பர்.



இனி ரவுடி கிராஸிங்குக்கு வருவோம. செல்லா (ரவிசங்கர்) என்ற ரவுடிக்கு அழகான பெண்களைப் பார்த்தால் எப்படியும் அவர்களுடன் படுத்துவிட வேண்டும் என்ற வியாதி. சம்பந்தப்பட்ட பெண்களின் அப்பாவோ, புருஷனோ... யாருடைய வண்டியையாவது டியூ கட்டவில்லை என்று தூக்கி வந்துவிடுவான். பிறகு வண்டி வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பெண்ணையோ, மனைவியையோ அவனுக்கு விருந்தாக அனுப்பி வைக்க வேண்டும். வண்டி இல்லாதவர்களின் வீட்டுப் பெண்களை செல்லா எப்படி மடக்குவான் என்ற ரகசியத்தை ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லாதபடி, விஜய்யின் கல்லூ‌ரி தோழிக்கு குறி வைக்கிறான் செல்லா. அந்த‌த் தோழியின் தந்தைதான் விஜய்க்கு ஆட்டோ வாடகைக்கு விட்டிருப்பவர்.



இதற்குப் பிறகு இயக்குனர் ஓய்வெடுக்க கனல் கண்ணன் களத்தில் குதித்திருக்கிறார். ரணகளம். செல்லா ஐசியூ-வில். போலீஸ் விஜய்யை அள்ளிக்கொண்டு போகிறது. காரணம், செல்லாவின் தந்தை வேதநாயகத்திடம் (சலீம் கவுஸ்) பஞ்சப்படி வாங்கி பிழைப்பவர் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் கட்டப்பொம்மன் (சாயா‌ஜி ஷிண்டே). போலீஸ் ஸ்டேஷனில் விஜய்யை போட்டு துவைக்கிறார்கள். அவரோ கதவை உடைத்து வந்து கட்டப்பொம்மனை மிதிக்கிறார். சென்னை சிட்டி போலீஸ் மொத்தமும் வந்த பிறகே அவரை அடக்க முடிகிறது.



இந்த களேபரத்துக்கு நடுவே அவ்வப்போது கண்ணீரும் கம்பலையுமாக விஜய்யை பார்த்துவிட்டு போகிறார் அனுஷ்கா. அவரை என்கவுண்ட‌ரில் போட்டுத் தள்ளப் போகிறார்கள் என்ற தகவலை அறிந்து தேவரா‌ஜிடம் உதவி கேட்டு ஓடுகிறார். ஒளிந்து வாழும் தேவரா‌ஜ் (ஒளிந்து வாழ்வதற்கு தனியாக பிளாஷ்பேக் இருக்கிறது) உதவி செய்ய மறுக்கிறார்.

காட்டுக்குள் நடக்கும் என்கவுண்டர் முயற்சியிலிருந்து தப்பிக்க ரத்த காயங்களுடன் அருவியில் குதிக்கிறார் விஜய். ஆ... அருவியிலிருந்து எழுந்து வரும் விஜய் ரத்த காயமின்றி பளபளப்பாக இருக்கிறார். இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று யோசித்து முடிப்பதற்குள் நியாயம் கேட்டு தேவரா‌ஜின் வீட்டிற்கு வருகிறார். ஆ... இப்போ என்ன? விஜய்யின் முகத்தில் மீண்டும் அதே ரத்த காயம்.



அடுத்து பிளாஷ்பேக். அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் தேவராஜை வேதநாயகமும் அவரது ஆட்களும் நடுவீதியில் அடித்துப் போட்டு பார்வையை பறிக்கிறார்கள். அவரது மனைவியையும், குழந்தையையும் வீட்டை‌ப் பூட்டி உயிரோடு எரிகக்கிறார்கள். தேவரா‌ஜ் பற்றிய சின்னச் சின்ன செய்திகளையும் தேடிப் படிக்கும் விஜய் இது கேட்டு ஆடிப் போகிறார்.



என்கவுண்டரையும், தேவரா‌ஜ் பற்றிய செய்திகளையும் பிரசு‌ரிக்கும் பத்தி‌ரிகைகள், அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் அவரை ரவுடிகள் அடித்து பார்வையைப் பறித்ததையோ, குடும்பத்தை உயிரோடு பப்ளிக்காக எரிதத்ததையோ பிரசு‌ரிக்காமல் இருட்டடிப்பு செய்திருக்கின்றன. என்ன அநியாயம்? பத்தி‌ரிகைகளின் ஓரவஞ்சனையை இயக்குனர் கட்டுடைக்கும் அற்புதமான இடம் இது.



இதன் பிறகு நடப்பதை அப்படியே எழுதுவதில் சிரமம் இருக்கிறது. காரணம் அவ்வளவு பாஸ்ட். ஒரே நாளில்... நாள்கூட இல்லை 9 டூ 5 க்குள் சலீம் கவுஸின் ஜுவல்ல‌ரியை எரி்க்கிறார், கட்டுமான கம்பெனியை தரைமட்டமாக்குகிறார் இன்னும் என்னென்னமோ செய்கிறார். அத்துடன் இது எதுவும் தெ‌ரியாமல் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கும் அவரது மகன் செல்லாவையும் கொலை செய்கிறார். ஒட்டுமொத்த சென்னை கார்ப்பரேஷன் நினைத்தாலும் செய்ய முடியாத ஒருநாள் சாதனைகள்.



சலீம் கவுஸ் மட்டும் சாதாரணமா? மகனுக்கு கொள்ளி வைத்த கையோடு அரசியல்வாதியிடம் பேரம் பேசி வேட்புமனு தாக்கல் செய்யாமல், இடைத்தேர்தலில் நிற்காமல் அடுத்த நாளே மந்தி‌ரியாவதற்கான ஏற்பாடை செய்து முடிக்கிறார். ஒருநாள் முதல்வர்கள் எல்லாம் பிச்சை எடுக்க வேண்டிய இடம்.



கிளைமாக்ஸ் அதிஅற்புதம். ஐநூறு பேர் அடித்துக் கொண்டிருக்கும் இடத்தில் சைரனைப் போடு, கார் கதவு திறந்தாச்சு என்ற விஜய்யின் டைர‌க்சனை கேட்டு கண் தெ‌ரியாத தேவரா‌ஜ் ச‌ரியாக வேதநாயகத்தை நெஞ்சில் சுட்டுக் கொல்கிறார். டைரக்டர் டச்.



அசிஸ்டெண்ட் கமிஷனரையே அசால்டாக போடும் சலீம் கவுஸ் அண்டு கோ-வின் ஒரே லட்சியம் தூத்துக்குடி ரவியை போடுவது. பலமுறை ரவியின் முகத்துக்கு நேராக துப்பாக்கியை பிடித்து ஆட்டுகிறார்களே தவிர ட்‌ரிக்கரை அழுத்தவில்லை. ஹீரோவை சுடக் கூடாது என்ற நியதியை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறார்கள் ரவுடிகள் (என்ன நேர்மை). அதிலும் அந்த மதுரை ரவுடி பக்கா. சண்டியோட ஆள் வந்தாலே சாவு வந்த மாதி‌ரி என்று துப்பாக்கியை வைத்து சாமியாடுகிறாரே தவிர ட்‌ரிக்கரை அழுத்தவில்லை. சாராயத்தை நிதானமாகக் குடித்து, லைட்டரை பற்ற வைத்து, அதை மதுரை பார்ட்டியின் முகத்தில் தீயாக விஜய் கொப்பளித்த பிறகே பிடிங்கடா வெட்டுங்கடா என்று பதறுகிறார். செம காமெடி.


பாடலுக்கான லீடையும் வித்தியாசமாகவே பிடித்திருக்கிறார் இயக்குனர். கட்டிப் போட்டிருக்கும் அனுஷ்காவை காப்பாற்றி துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவில் பாய்ந்தும், தாவியும் தப்பித்து உயிரை‌க் கையில் பிடித்து பைக்கை கிளப்பினால், நான் உங்கூட தனியா இருக்கணும் என்று அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கேட்ட த்‌ரிஷா மாதி‌ரி பில்லினில் உட்கார்ந்து விஜய்யின் முதுகை பிறாண்டுகிறார் அனுஷ்கா. உடனே கலர் கலரான ட்ரெஸ்ஸில் டூயட். ஒரு பைட் ஒரு பாட்டு... அமர்க்கள திரைக்கதை.



பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அனுஷ்காவின் உடைக்கு. தாவணியை தாண்டி பார்க்காதே என்று அனுஷ்கா பாடும் போது அவர் தாவணி போட்டிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. ‌ஜிகினா வைத்த பிரா, சின்னதே சின்னதாக ஒரு கர்ச்சீஃப். விஜய்யின் அசைவுகளில் ரசிக்கக் கூடிய அதே துள்ளல்.



சண்டைக் காட்சிகளில் விஜய் ரவுடிகளை அடிக்கும் போது இரண்டுபேர் கேமராவையும் உதைப்பார்கள் போலிருக்கிறது. அவ்வளவு ஆட்டம். சலீம் கவுஸ் விஜய்யிடம் பேசும் போது கேமரா பின்னணி சத்தத்துடன் சர் சர்ரென்று தாவுகிறது. டெரர் எஃபெக்ட்?



சத்யன் இருந்தாலும் காமெடிக்கான ஸ்கோப் கட்டபொம்மன் சாயாஷிக்குதான். இவர் வரும் காட்சியில் ஒன்று தனது வப்பாட்டியுடன் போனில் பேசுகிறார், இல்லை இவரது வப்பாட்டியைப் பற்றி வேறு யாராவது பேசுகிறார்கள்.



தான் நேசித்த போலீஸ் வேலை கிடைத்தும், அதை மறுத்துவிட்டு, ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு போலீஸ்காரன் இருக்கிறான் என விஜய் டச்சிங்காக பேசுவதுடன் சுபம் போட்டு, புலி உறுமுது பாடலை ஒலிக்கவிடுகிறார்கள். உறுமலை கேட்ட மாதி‌ரியே வெளியே வருகிறார்கள் பார்வையாளர்கள்.

¦Á¡ò¾¾¢ø À¼ò¾¢ø 16 ¡£ø 16õ ¡£ø

§Åð¨¼ì¸¡Ãý §Å.....ð¨¼ì¸Ãý

Tuesday, December 15, 2009

நண்பர்களே

இத்தளம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை.

அனைவரும் மகிழவே யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கலாய்க்கிறது.

இதை விரும்பாதவர்கள் தயவு கூர்ந்து பொருட்படுத்தவேண்டாம்.




இப்படிக்கு உங்களில் ஒருவன்

குசும்பு மன்னன்