Saturday, May 8, 2010

சுறா

குருவி, வில்லு, வேட்டைக்காரனில் பார்த்த அதே நாலு நாள் தாடி விஜய், அதே வசன உச்ச‌ரிப்பு, பன்ச் டயலாக், ஓபனி‌ங் பாடல், ஹிஸ்டீ‌ரியா வில்லன், கிச்சுகிச்சு வடிவேலு, அசமந்தான ஹீரோயின்... படத்தின் பெயர் மட்டும் வேறு, சுறா.

WD
யாழ் குப்பத்தின் செல்லப்பிள்ளை சுறா (விஜய்). குப்பத்து ஜனங்களுக்கு ஒரு கஷ்டமென்றால் கிரஃபிக்ஸ் சூறாவளியுடன் பொங்கியெழுவார். எண்பது வயது கிழவர், இதுவரை சுறாவோட வழிகாட்டலில் வாழ்ந்திட்டோம், இனி என்ன செய்யப் போகிறோம் என்று கண்கலங்கும் போது நமக்கு நெஞ்சு வெடிக்கிறது. முப்பது வயசு சுறா எண்பது வயசு பெ‌ரிசுக்கு எப்பிடிப்பா வழி காட்டினார்?

குப்பத்து மக்களின் ஒட்டுமொத்த பில்டப்பில் வாழும் சுறாவுக்குள் ஒரு லட்சியம் ஒளிந்திருக்கிறது. மொத்த குப்பத்துக்கும் தீயில் எ‌ரியாத, மழையில் ஒழுகாத காரை வீடு கட்டித்தர வேண்டும். லட்சியத்தை எப்படி அடைவது என்று சுறா யோசிக்கும் போது, உள்ளூர் அமைச்சர் குப்பத்தையே ூக்கிவிட்டு தீம் பார்க் கட்ட பிளான் பண்ணுகிறார். சுறசுறுசுறுப்படைகிறார்.

ஓவர் நைட்டில் அமைச்ச‌ரின் கடத்தல் பொருட்களை கையகப்படுத்தி, மும்பையில் அதை விற்று காசாக்கி (100 கோடி) ஐம்பது லட்ச ரூபாய் கா‌ரில் அடுத்த நாள் காலை குப்பத்துக்குள் எ‌ண்ட்‌ரியாகிறார் விஜய். காசு குடு சந்தைக்குப் போணும், ஆத்தா வையும் சப்பாணி மாதி‌ி அமைச்சர் ூறு கோடி கேட்டு விஜய்யை இம்சிக்க, அவர் தர மறுக்க, இறுதியில் விஜய்யின் காரை வீடு கனவு நிறைவேறியதா என்பதுடன் சுபம்.

திரைக்கதையில் ஓட்டையைப் பார்த்திருக்கிறோம். ஒரு ஓட்டையையே திரைக்கதையாக்கியிருக்கும் திறமைசாலி இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ராஜகுமார். புயலில் அறுபது மீனவர்கள் மாட்டிக் கொண்டார்களாம். அறுபது பேரையும் விஜய் தனியாளாக கரை சேர்த்தாராம் (ஏன், அந்த மீனவ நண்பர்களுக்கு நீச்சல் தெ‌ரியாதா?). ஆனால் அறுபது பேரை காப்பாற்றிய விஜய்யை மட்டும் காணவில்லை. விஜய்யின் அருமை பெருமைகளை குப்பம் அள்ளிவிடும் போது இடுப்பளவு தண்ணியிலிருந்து எம்பி வருகிறார் விஜய். தொடங்குகிறது ஓபனிங் சரவெடி பாட்டு.

ஐம்பது ரேஷன் கார்டையே பாதுகாப்பாக வைக்க முடியாமல் பா‌ி‌ரியா‌ரிடம் ஒப்படைக்கும் விஜய், ூறு கோடி பெறுமானமுள்ள லேப் டாப்களை கடத்தி மும்பை பார்ட்டியிடம் விற்று... அழகழகா பூச்சுற்றுகிறார்கள். அதிலும் சிவகாசி புஸ்வாணத்தை கொளுத்தி கடத்தல்காரர்களை ஓடவிடுவதெல்லாம் ‘தமிழ்ப்படத்தை’யே கிண்டலடிக்கும் சமாச்சாரங்கள்.
ம், நடனமும் அற்புதமாக வருகிறது. ஆனால் இந்த ‘ஒளியும் ஒலி’யும் மட்டும் ஒரு படத்துக்குப் போதாது என்பதை அவர் எப்போது பு‌ரிந்து கொள்ளப் போகிறார்? அதேபோல் காமெடி என்றதும் தோளை குறுக்கி வாய்ஸை நாய்ஸாக மாற்றுவதையும் விட்டுவிட்டால் நல்லது. கோர்ட்டில் அவர் அடிக்கும் கொட்டம் காமெடி அல்ல, ராவடி.

தேவையேயில்லாத திணிப்பு தமன்னா. நாய் காணாமல் போனதுக்காக கடலில் விழுந்து சாகப் போகும் இவரது கேரக்டர் இந்த வருடத்தின் மொக்க ராசு. சி‌ரிக்க மட்டுமே தெ‌ரிந்த இவ‌ரிடமிருந்து நடிப்பை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சாட்சி. 

சுறாவின் தோஸ்தாக வரும் வடிவேலுக்கும் பெ‌ரிதாக ஸ்கோப்பில்லை. என்றாலும் கிடைக்கிற கேப்பிலும் கிச்சு கிச்சு மூட்டுகிறார். பாகவதர் வெண்ணிறாடை மூர்த்தியை பேசாமலே சதாய்க்கிறாரே... சபாஷ். முகர்ந்து பார்த்தே வெளியாள் தனது இடத்துக்கு வந்திருப்பதை கண்டுபிடிக்கும் வில்லன் தேவ் கில் அடுத்தடுத்த காட்சிகளில் தேய்ந்த கில்லாகிறார். தனது கெஸ்ட் ஹவுஸில் அவ்வளவு போலீஸுக்கு மத்தியில் விஜய்யை ஒன்றும் பண்ண முடியாமல் கையை பிசைவதெல்லாம் படா தமாஷ். 

படத்தின் ஆரம்ப காட்சிகள் ஏதோ சீ‌ரியல் பார்க்கும் எஃபெக்டையே தருகின்றன. ஏகாம்பரத்தின் கேமராவும், எடிட்ட‌ரின் கத்தி‌ரியும் இருந்ததால் பிழைத்தோம். படத்தின் ஆகப் பெ‌ரிய ப்ளஸ் பாடல்களும், விஜய்யின் நடனமும். கனல் கண்ணனின் ஆ‌க்சனில் புதிதாக ஒன்றுமில்லை.

விஜய் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ‌ரியாஸ்கான் கஞ்சா கேஸ் போட்டு கோர்ட்டில் நிறுத்துவதும், விஜய் நீதிபதியிடம் காமெடி செய்து ‌ரியாஸ்கான் வீட்டை சோதனை போட வைப்பதும், அவர் வீட்டில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி, விஜய்யை விடுவித்து... ஐயா சத்தியமா நம்புங்க இந்த விஷயங்கள் எல்லாம் ஒரே நாளில் நடக்கிறது. 

லெதர் கோட் போட்டு ஐம்பது லட்ச ரூபாய் கா‌ரில் சவு‌ி முடி விக்க வந்தேன் என்கிறார் விஜய். அதுவும் பாம் இருப்பதாக தகவல் கிடைத்த அமைச்ச‌ரின் வீட்டில். அப்பிடிங்களாயா... நீங்க போய்ட்டு வாங்க என சல்யூட் அடித்து அனுப்பி வைக்கிறது போலீஸ். ஒருத்தரை ஹீரோவாக்க மத்தவங்க எல்லோரையும் முட்டாளாக்க வேண்டுமா?

கூரான உறுதியான பற்கள் அதிகம் இருப்பதால் ‘கடி’ப்பதில் சுறாவுக்கே முதலிடம். இந்த அறிவியல் உண்மையை அனுபவப்பூர்வ மாக்கியிருக்கிறார்கள் விஜய்யும், ராஜகுமாரும்.



நமது குசும்பு விமர்சன குழுவிற்கு வேலைப்பளுவை குறைக்கும் விஜய் வாழ்க விஜய் படங்கள் தொடர்ந்து மொக்கையாய் வர வாழ்த்துகிறோம் 
-குசும்பு விமர்சன குழு