Thursday, January 21, 2010

குட்டி நச் விமர்சனம்

கு‌ட்டி  

தெலுங்கில் வெற்றிபெற்ற ஆ‌ரியா படத்தின் ‌‌ரீமேக். தனுஷ், ஸ்ரேயா நடிக்க மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியிருக்கிறார்.


WD
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் தொடர்ந்து வரும் முக்கோண காதல் கதைதான் குட்டியின் கதையும். தனுஷுக்கு ஸ்ரேயா மீது காதல், ஸ்ரேயாவுக்கோ சமீர் தத்வானி மீது லவ். சண்டைக்குப் போகாமல் சாத்வீகமான முறையில் ஸ்ரேயாவின் காதலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் தனுஷின் கதாபாத்திரம் மட்டும் கொஞ்சமோ கொஞ்சம் புதுசு.

சமீர் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான பணக்கார இளைஞன். ஸ்ரேயாவின் காதலை‌ப் பெற மாடியில் இருந்து குதிப்பேன் என்று மிரட்டுகிறார். பாவம்டி அவன் என்று தோழிகள் சாம்பிராணி போட, ஸ்ரேயாவும் ஐ லவ் யூ சொல்கிறார். தமிழ் சினிமா த‌‌ரித்திரத்தில்... ஸா‌ி, ச‌ரித்திரத்தில் ஆயிரத்தோரு முறை அரங்கேறிய இந்த‌க் காட்சியை மீண்டும் எப்படி வைக்கத் துணிந்தார்களோ?

இந்த ஐ லவ் யூவை கேட்டுக் கொண்டே எ‌ண்ட்‌ரியாகிறார் தனுஷ். ஸ்ரேயாவை பார்த்த உடனே அவருக்குள் காதல். நான் உன்னை காதலிக்கிறேன், நீ அவனை காதலிக்கிற என்று சொல்லியபடியே ஸ்ரேயா பின்னால் சுற்றுகிறார். இடையிடையே, ஸ்ரேயா எனக்குதான் என்று சமீருக்கு இனிமாவும் கொடுக்கிறார்.

ஸ்ரேயா, சமீர் காதலுக்கு திடீர் வில்லனாகும் ராதாரவிக்குப் (சமீ‌ரின் தந்தை) பயந்து ஊரைவிட்டு ஓடுகிறது காதல் ஜோடி. அவர்களுக்கு உதவி செய்கிறார் தனுஷ். சமீர் அப்பாவை சமாதானம் செய்து அழைத்து வரும் ஒருவார கேப்பில் ஸ்ரேயா மனதில் பெவிகாலாய் ஒட்டிக் கொள்கிறார் தனுஷ். மணவறையில் ஸ்ரேயா யாருக்கு மாலை போடுகிறார் என்பதுடன் சுபம்.

சுவாரஸியமே இல்லாத திரைக்கதையை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்துகிறார் தனுஷ். அதற்காக ஓட்டைப் பானையில் ஒண்ணுக்கிருந்த மாதி‌ி லொட லொட என்று பேசுவது சில நேரம் எ‌ரிச்சலை கிளப்புகிறது. தனுஷ் யார், ஸ்ரேயாவுக்கு சொந்தம் என்று யாராவது உண்டா என்பது போன்ற அடிப்படை கேள்விகளுக்கு படத்தில் பதிலில்லை. ஆளில்லாத ஏ‌ரிக்கரை பூசா‌ரி தனுஷை பற்றி சொல்வது நம்பும்படி இல்லை.

ஸ்ரேயா எல்லா காட்சிகளிலும் சுமாராகவே இருக்கிறார். நடிப்பும் அப்படியே. வழக்கமாக அமெ‌ரிக்காவிலிலுந்து ‌ரிட்ட‌ன் ஆகும் பா‌ரின் மாப்பிள்ளை ரோல்தான் சமீருக்கு. என்ன இதில் படம் நெடுக வருகிறார்.

இரண்டு பாடல்கள் கேட்கலாம் ரகம். இந்த‌க் கதைக்கு எப்படி ஒளிப்பதிவு செய்தாலும் அதிகம்தான். குட்டி என்றால் பதினாறு அடி பாயுமாம். இந்த குட்டி தவழ்ந்திருப்பது நாலே அடி.

No comments:

Post a Comment