Friday, December 25, 2009

வேட்டைக்காரன் குசும்பு விமர்சனம்

வேட்டைக்காரன்

குருவி, வில்லு வ‌ரிசையில் விஜய் நடித்திருக்கும் இன்னொரு வித்தியாசமான படம், வேட்டைக்காரன். குருவியை இயக்கிய தரணியிடம் அசோஸியேட்டாக இருந்த பாபு சிவன் வேட்டைக்காரனின் இயக்குனர். நாக்கமுக்க புகழ் விஜய் ஆண்டனி இசை.
திருப்பாச்சியில் சிற்றூ‌ரிலிருந்து சென்னைக்கு வந்து ரவுடிகளை அழிக்கும் விஜ‌ய், வேட்டைக்காரனில் வித்தியாசமாக பெருநகரம் தூத்துக்குடியிலிருந்து சென்னை வந்து ரவுடிகளை அழிக்கிறார். அவரது தூத்துக்குடி டூ சென்னை பயண நோக்கமும் படு வித்தியாசம்.

ரயில்வே ஸ்டேஷன் போன்ற சந்தடி மிகுந்த இடங்களில் தனியாளாக ரவுடிகளை என்கவுண்ட‌ரில் போட்டுத் தள்ளும் போலீஸ் அதிகா‌ரி தேவரா‌ஜ் (தெலுங்கு நடிகர் ஸ்ரீஹ‌ரி). இவரது ஆதர்ஷ ஃபேன் தூத்துக்குடியில் வசிக்கும் ரவி என்கிற போலீஸ் ரவி (விஜய்). சென்னை வரும் போலீஸ் ரவி தேவரா‌ஜ் போலவே ஆட்டோ ஓட்டி, அவர் படித்த கல்லூரியிலேயே படிக்கிறார். தேவரா‌ஜ் போலவே என் கவுண்டர் போலீஸாக வேண்டும் என்பது ரவியின் கனவு, லட்சியம்.

இந்த‌க் கனவு, லட்சியத்துக்கு நடுவில் ரவுடி கும்பல் ஒன்று கிராஸாகிறது. (எப்படி கிராஸாகிறார்கள் என்பதை பிறகு பார்ப்போம்). ரவுடிகளை அழித்து சென்னையை ரவி எப்படி சுத்திக‌ரிக்கிறார் என்பது வேட்டைக்காரனின் மைய கதை.




விஜய்யின் அறிமுக காட்சிக்கே இயக்குனர் அதிகம் யோசித்திருக்கிறார். முதியவர் ஒருவரை இடித்துவிட்டு செல்லும் போலீஸ் வண்டியை விஜய் துரத்துகிறார். முடியவில்லை. திரும்பிப் பார்த்தால் குதிரைக்கு லாடம் அடிக்கும் இடம். அங்கே சில குதிரைகள். அடுத்தகணம் வெள்ளை குதிரையில் தலையில் கௌபாய் தொப்பியுடன் ஸ்லோமோஷனில் வண்டியை துரத்துகிறார் விஜய். கௌபாய் தொப்பியை குதிரைக்கார‌ரிடமிருந்து விஜய் வாங்கியிருக்கலாம். இயக்குனர் காட்டவில்லை. இப்படி பார்வையாளர்களே யூகித்து பு‌ரிந்து கொள்ள பல்வேறு காட்சிகளை புத்திசாலித்தனமாக வைத்திருக்கிறார்கள்.



போலீஸ்கார‌ரிடமிருந்து பணத்தை எடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் கொடுப்பதும், அவர்கள் உங்களைப் போல் யாருண்டு என்று வாழ்த்துவதும் மரபு மாறாமல் வரும் அடுத்த காட்சிகள். அறிமுக காட்சிக்குப் பின் அட்வைஸ் பண்ணுகிற பாடல் என்ற மரபையும் கறாராக பின்பற்றியிருக்கிறார்கள்.



கதாநாயகியின் அறிமுகத்தையும் சிறப்பாக குறிப்பிட வேண்டும். திருமணம் பற்றி பேச்சு வருகிறது. எனக்கான பெண் இனிமேலா பிறக்கப் போகிறாள்? அவ எப்போதோ பிறந்திருப்பாள் என்கிறார் விஜய். உடனே தலையை கோதியபடி அனுஷ்கா எ‌ண்ட்‌ரி. தியேட்ட‌ரில் விசில். வித்தியாசமான அற்புத காட்சி.



விஜய் அனுஷ்காவின் பாட்டியை கரெக்ட் செய்வதும், அவரது ஸ்கூட்டியை கண்டுபிடிப்பதுமான காமெடி காட்சிகளுக்கு குழந்தைகளும் பெ‌ரியவர்களும் சேர்ந்து சி‌ரிப்பதை குறிப்பிட்டாக வேண்டும். காமெடி சீன் என்றதும் தோளை குறுக்கி தலையை ஆட்டி என்னங்கண்ணா என்று விஜய் பேச்சையும், பாடி லாங்வேஜையும் மாற்றுவது சூப்பர்.



இனி ரவுடி கிராஸிங்குக்கு வருவோம. செல்லா (ரவிசங்கர்) என்ற ரவுடிக்கு அழகான பெண்களைப் பார்த்தால் எப்படியும் அவர்களுடன் படுத்துவிட வேண்டும் என்ற வியாதி. சம்பந்தப்பட்ட பெண்களின் அப்பாவோ, புருஷனோ... யாருடைய வண்டியையாவது டியூ கட்டவில்லை என்று தூக்கி வந்துவிடுவான். பிறகு வண்டி வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் பெண்ணையோ, மனைவியையோ அவனுக்கு விருந்தாக அனுப்பி வைக்க வேண்டும். வண்டி இல்லாதவர்களின் வீட்டுப் பெண்களை செல்லா எப்படி மடக்குவான் என்ற ரகசியத்தை ரசிகர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பில்லாதபடி, விஜய்யின் கல்லூ‌ரி தோழிக்கு குறி வைக்கிறான் செல்லா. அந்த‌த் தோழியின் தந்தைதான் விஜய்க்கு ஆட்டோ வாடகைக்கு விட்டிருப்பவர்.



இதற்குப் பிறகு இயக்குனர் ஓய்வெடுக்க கனல் கண்ணன் களத்தில் குதித்திருக்கிறார். ரணகளம். செல்லா ஐசியூ-வில். போலீஸ் விஜய்யை அள்ளிக்கொண்டு போகிறது. காரணம், செல்லாவின் தந்தை வேதநாயகத்திடம் (சலீம் கவுஸ்) பஞ்சப்படி வாங்கி பிழைப்பவர் அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் கட்டப்பொம்மன் (சாயா‌ஜி ஷிண்டே). போலீஸ் ஸ்டேஷனில் விஜய்யை போட்டு துவைக்கிறார்கள். அவரோ கதவை உடைத்து வந்து கட்டப்பொம்மனை மிதிக்கிறார். சென்னை சிட்டி போலீஸ் மொத்தமும் வந்த பிறகே அவரை அடக்க முடிகிறது.



இந்த களேபரத்துக்கு நடுவே அவ்வப்போது கண்ணீரும் கம்பலையுமாக விஜய்யை பார்த்துவிட்டு போகிறார் அனுஷ்கா. அவரை என்கவுண்ட‌ரில் போட்டுத் தள்ளப் போகிறார்கள் என்ற தகவலை அறிந்து தேவரா‌ஜிடம் உதவி கேட்டு ஓடுகிறார். ஒளிந்து வாழும் தேவரா‌ஜ் (ஒளிந்து வாழ்வதற்கு தனியாக பிளாஷ்பேக் இருக்கிறது) உதவி செய்ய மறுக்கிறார்.

காட்டுக்குள் நடக்கும் என்கவுண்டர் முயற்சியிலிருந்து தப்பிக்க ரத்த காயங்களுடன் அருவியில் குதிக்கிறார் விஜய். ஆ... அருவியிலிருந்து எழுந்து வரும் விஜய் ரத்த காயமின்றி பளபளப்பாக இருக்கிறார். இந்த அதிசயம் எப்படி நடந்தது என்று யோசித்து முடிப்பதற்குள் நியாயம் கேட்டு தேவரா‌ஜின் வீட்டிற்கு வருகிறார். ஆ... இப்போ என்ன? விஜய்யின் முகத்தில் மீண்டும் அதே ரத்த காயம்.



அடுத்து பிளாஷ்பேக். அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் தேவராஜை வேதநாயகமும் அவரது ஆட்களும் நடுவீதியில் அடித்துப் போட்டு பார்வையை பறிக்கிறார்கள். அவரது மனைவியையும், குழந்தையையும் வீட்டை‌ப் பூட்டி உயிரோடு எரிகக்கிறார்கள். தேவரா‌ஜ் பற்றிய சின்னச் சின்ன செய்திகளையும் தேடிப் படிக்கும் விஜய் இது கேட்டு ஆடிப் போகிறார்.



என்கவுண்டரையும், தேவரா‌ஜ் பற்றிய செய்திகளையும் பிரசு‌ரிக்கும் பத்தி‌ரிகைகள், அசிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் அவரை ரவுடிகள் அடித்து பார்வையைப் பறித்ததையோ, குடும்பத்தை உயிரோடு பப்ளிக்காக எரிதத்ததையோ பிரசு‌ரிக்காமல் இருட்டடிப்பு செய்திருக்கின்றன. என்ன அநியாயம்? பத்தி‌ரிகைகளின் ஓரவஞ்சனையை இயக்குனர் கட்டுடைக்கும் அற்புதமான இடம் இது.



இதன் பிறகு நடப்பதை அப்படியே எழுதுவதில் சிரமம் இருக்கிறது. காரணம் அவ்வளவு பாஸ்ட். ஒரே நாளில்... நாள்கூட இல்லை 9 டூ 5 க்குள் சலீம் கவுஸின் ஜுவல்ல‌ரியை எரி்க்கிறார், கட்டுமான கம்பெனியை தரைமட்டமாக்குகிறார் இன்னும் என்னென்னமோ செய்கிறார். அத்துடன் இது எதுவும் தெ‌ரியாமல் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கும் அவரது மகன் செல்லாவையும் கொலை செய்கிறார். ஒட்டுமொத்த சென்னை கார்ப்பரேஷன் நினைத்தாலும் செய்ய முடியாத ஒருநாள் சாதனைகள்.



சலீம் கவுஸ் மட்டும் சாதாரணமா? மகனுக்கு கொள்ளி வைத்த கையோடு அரசியல்வாதியிடம் பேரம் பேசி வேட்புமனு தாக்கல் செய்யாமல், இடைத்தேர்தலில் நிற்காமல் அடுத்த நாளே மந்தி‌ரியாவதற்கான ஏற்பாடை செய்து முடிக்கிறார். ஒருநாள் முதல்வர்கள் எல்லாம் பிச்சை எடுக்க வேண்டிய இடம்.



கிளைமாக்ஸ் அதிஅற்புதம். ஐநூறு பேர் அடித்துக் கொண்டிருக்கும் இடத்தில் சைரனைப் போடு, கார் கதவு திறந்தாச்சு என்ற விஜய்யின் டைர‌க்சனை கேட்டு கண் தெ‌ரியாத தேவரா‌ஜ் ச‌ரியாக வேதநாயகத்தை நெஞ்சில் சுட்டுக் கொல்கிறார். டைரக்டர் டச்.



அசிஸ்டெண்ட் கமிஷனரையே அசால்டாக போடும் சலீம் கவுஸ் அண்டு கோ-வின் ஒரே லட்சியம் தூத்துக்குடி ரவியை போடுவது. பலமுறை ரவியின் முகத்துக்கு நேராக துப்பாக்கியை பிடித்து ஆட்டுகிறார்களே தவிர ட்‌ரிக்கரை அழுத்தவில்லை. ஹீரோவை சுடக் கூடாது என்ற நியதியை அட்சரம் பிசகாமல் கடைபிடிக்கிறார்கள் ரவுடிகள் (என்ன நேர்மை). அதிலும் அந்த மதுரை ரவுடி பக்கா. சண்டியோட ஆள் வந்தாலே சாவு வந்த மாதி‌ரி என்று துப்பாக்கியை வைத்து சாமியாடுகிறாரே தவிர ட்‌ரிக்கரை அழுத்தவில்லை. சாராயத்தை நிதானமாகக் குடித்து, லைட்டரை பற்ற வைத்து, அதை மதுரை பார்ட்டியின் முகத்தில் தீயாக விஜய் கொப்பளித்த பிறகே பிடிங்கடா வெட்டுங்கடா என்று பதறுகிறார். செம காமெடி.


பாடலுக்கான லீடையும் வித்தியாசமாகவே பிடித்திருக்கிறார் இயக்குனர். கட்டிப் போட்டிருக்கும் அனுஷ்காவை காப்பாற்றி துப்பாக்கி குண்டுகளுக்கு நடுவில் பாய்ந்தும், தாவியும் தப்பித்து உயிரை‌க் கையில் பிடித்து பைக்கை கிளப்பினால், நான் உங்கூட தனியா இருக்கணும் என்று அக்கம் பக்கம் யாருமில்லா பூலோகம் கேட்ட த்‌ரிஷா மாதி‌ரி பில்லினில் உட்கார்ந்து விஜய்யின் முதுகை பிறாண்டுகிறார் அனுஷ்கா. உடனே கலர் கலரான ட்ரெஸ்ஸில் டூயட். ஒரு பைட் ஒரு பாட்டு... அமர்க்கள திரைக்கதை.



பாடலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அனுஷ்காவின் உடைக்கு. தாவணியை தாண்டி பார்க்காதே என்று அனுஷ்கா பாடும் போது அவர் தாவணி போட்டிருப்பார் என்றுதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. ‌ஜிகினா வைத்த பிரா, சின்னதே சின்னதாக ஒரு கர்ச்சீஃப். விஜய்யின் அசைவுகளில் ரசிக்கக் கூடிய அதே துள்ளல்.



சண்டைக் காட்சிகளில் விஜய் ரவுடிகளை அடிக்கும் போது இரண்டுபேர் கேமராவையும் உதைப்பார்கள் போலிருக்கிறது. அவ்வளவு ஆட்டம். சலீம் கவுஸ் விஜய்யிடம் பேசும் போது கேமரா பின்னணி சத்தத்துடன் சர் சர்ரென்று தாவுகிறது. டெரர் எஃபெக்ட்?



சத்யன் இருந்தாலும் காமெடிக்கான ஸ்கோப் கட்டபொம்மன் சாயாஷிக்குதான். இவர் வரும் காட்சியில் ஒன்று தனது வப்பாட்டியுடன் போனில் பேசுகிறார், இல்லை இவரது வப்பாட்டியைப் பற்றி வேறு யாராவது பேசுகிறார்கள்.



தான் நேசித்த போலீஸ் வேலை கிடைத்தும், அதை மறுத்துவிட்டு, ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் ஒரு போலீஸ்காரன் இருக்கிறான் என விஜய் டச்சிங்காக பேசுவதுடன் சுபம் போட்டு, புலி உறுமுது பாடலை ஒலிக்கவிடுகிறார்கள். உறுமலை கேட்ட மாதி‌ரியே வெளியே வருகிறார்கள் பார்வையாளர்கள்.

¦Á¡ò¾¾¢ø À¼ò¾¢ø 16 ¡£ø 16õ ¡£ø

§Åð¨¼ì¸¡Ãý §Å.....ð¨¼ì¸Ãý

Tuesday, December 15, 2009

நண்பர்களே

இத்தளம் யாரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்படவில்லை.

அனைவரும் மகிழவே யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கலாய்க்கிறது.

இதை விரும்பாதவர்கள் தயவு கூர்ந்து பொருட்படுத்தவேண்டாம்.




இப்படிக்கு உங்களில் ஒருவன்

குசும்பு மன்னன்

குசும்பு





 

Monday, December 14, 2009

குசும்பு படங்கள் பாகம் 2









இன்றைய குசும்புகள்








Friday, December 11, 2009

அசல் பில்லா

Thursday, December 10, 2009

வேட்டைக்காரன் நான் அடிச்சா

வேட்டைக்காரன் புலிவருது

குசும்பு 
iஇத்தளம் உங்களுக்கு குசும்பான பல தகவல்களை தருகிறது.
உங்களது கருத்துகள் மற்றும் படைப்புக்களை அனுப்பவும்